2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வறிய மாணவர்கள் 100 பேருக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் 100 பேருக்கு சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை (30) வழங்கப்பட்டன.

கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஊடாக ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தலா 15,000 ரூபா பெறுமதியான சைக்கிள்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

கிளிநொச்சி ஒத்துழைப்பு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையம் படிப்படியாக நிவர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .