2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்தில் மீன்பிடித்துறை 15 வீதமாக வளர்ச்சி: ராஜித

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

யுத்த காலத்தில் வடமாகாணத்தில் 07 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடித்துறையை  தற்போது 15 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் 20 நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வியாழக்கிழமை (06)  வள்ளங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால்  வடமாகாணம்; அடக்கப்பட்டிருந்தமையால் எனது அமைச்சினூடாக  கூடுதலான நிதியை இங்கு வழங்கியிருக்கிறோம்.

வவுனியாவில் நன்னீர் மீன்பிடி மாத்திரமே காணப்படுகிறது. எனினும், வடபகுதியான  யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய  மாவட்டங்களுக்கு எங்களுடைய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நிதியை விட கூடுதலான நிதி வழங்கப்படுகிறது. இதனூடாக அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது.

மீன்பிடித்துறையில் பொருளாதார மையமாக வடமாகாணம் காணப்படுகி;றது. யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் 1980 களில்   இந்நாட்டின் தேசிய மீன் உற்பத்தியில் 47 சதவீதத்தை வடமாகாணமும் 27 சதவீதத்தை கிழக்கு மாகாணமும் பெற்றுக்கொடுத்தது.

யுத்த காலத்தில் வடமாகாணத்தில் 07 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடித்துறையை தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளோம். அவ்வாறே கிழக்கு மாகாணமும் 15 சதவீதத்திலிருந்து தற்போது 23 சதவீதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

தற்போது எமக்கு தேவையாகவுள்ளது வடமாகாணத்தின் கரையோரத்திற்கு தேவையான இறங்குதுறைகள், நங்கூரமிடும் தளங்கள், மீன்பிடித்துறைமுகங்களாகும். இவைகளை அமைத்து வடமாகாணத்திலிருந்து மாத்திரம் மீன் உற்பத்தியை 50 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமென்பதேயாகும். அவ்வாறோ நன்னீர் மீன்பிடியையும் அதிகரிக்க வேண்டும்.

வடமாகாண தேர்தல் மூலம் மீன்பிடி அமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து எதிர்காலத்தில் பல அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கி;றேன். அவ்வாறே இன்று உங்களுக்கு முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் எனது நீண்டகால நண்பராவர். அவர் மூலமாகவும் எதிர்காலத்தில் இங்கு  பல பிரச்சினைகள் நீக்கப்;படலாமென்ற எண்ணம் எனக்குள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தென்பகுதியில் வாழ்ந்தமையால், பெரும்பான்மையின மக்களின் எண்ணங்களை நன்கறிந்திருக்கக் கூடியவர்.  அவருக்கு பெரும்பான்மையின மக்களுடன் இணைந்து இந்நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வல்லமையுண்டு. எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் என எதிர்பார்க்கின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .