2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கற்சிலைமடுவில் 17 எறிகணைகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலைமடுவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து ஆர்.பி.ஜி வகையைச் சேர்ந்த 17 எறிகணைகள் இன்று (04) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த கிணற்றில் ஆயுதங்கள் மேலும் இருக்கலாம் என சந்தேகம் நிலவுவதால் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டினை வாடகைக்கு எடுத்த நிறுவனமொன்று வீட்டின் கிணற்றினை துப்பரவு செய்யும் வேளையிலேயே மேற்படி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஓட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்திற்கு இராணுவத்தினருடன் வருகை தந்த பொலிஸார் எறிகணைகளை மீட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .