2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மார்ச் 22 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் 21 பேரையும் எதிர் வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 21 பேர் புதன் கிழமை (19)இரவு 7.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின் இவர்கள் வியாழக்கிழமை (20) காலை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரனைகள் மேற்கொளளப்பட்ட பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

-மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நேற்று(20) மாலை 4 மணியளவில் குறித்த 21 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முழுமையான வாக்கு மூலம் பதிவு செய்த பின் இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.இதன் போதே இவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .