2025 ஜூலை 23, புதன்கிழமை

திருக்கேதீஸ்வரத்திலிருந்து மேலும் 4 எலும்புக் கூடுகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 03 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தி பகுதியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமையும் மனித எலும்புக் கூடுகள் நான்கு மீட்கப்பட்டுள்ளன என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திலிருந்து கடந்த 20 ஆம் திகதி முதல் இது வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 15 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ன முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது.

குறித்த மனித புதைகுழியிலிருந்து சில தடயப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த மன்னார் பொலிஸார் புதை குழியை தோண்டும் நடவடிக்கை நாளை சனிக்கிழமையும் முன்னெடுக்கப்படும் என்றனர்.

இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளையும் எச்சங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புதைகுழி தோண்டப்பட்டப்போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தையும் பிரசன்னமாய் இருந்தார்.

மாந்தை சந்தியில் இருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் நீர் இணைப்பிற்காக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடங்கு தோண்டிய போது மூன்று மண்டையோடுகளும்இமனித எலும்புகளும் மீட்கப்பட்டதையடுத்தே மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.






  Comments - 0

  • robert Saturday, 04 January 2014 02:48 AM

    இதைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் உங்கள் ஆங்கில பதிப்பில் இல்லையே ஏன் பாருங்கோ????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .