2025 ஜூலை 16, புதன்கிழமை

திவிநெகுமவின் 6ஆம் கட்ட பணிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

திவிநெகும திட்டத்தின் ஆறாம் கட்ட பணிகள்  நேற்று திங்கட்கிழமை  நாடு பூராகவும் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், வவுனியா வடக்கு புளியங்குளம் சமுர்த்தி வங்கிச்  சங்கத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மக்கள் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இலகுவாக  கடன்களை பெற்றுக்கொள்ளும் முகமாக புதிய கடன் வசதிகளுடன் இந்தத்; திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் உதவி முகாமையாளர் எஸ்.இலங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புளியங்குளம் வங்கிச் சங்கத்துக்கு  உட்பட 9 சமுர்த்தி உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு கடன்கள்  முதற்கட்டமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில்; திவிநெகுமவின் வலயம் 6 இன் மேலதிகப் பணிப்பாளர் டி.குமாரசிறி, வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X