2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் இரு நாட்களில் 71 பேர் சாட்சியமளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்  முன்னிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் 71 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (18) ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சாட்சியமளிப்பதற்காக அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். இருப்பினும், இவர்களில் 37 பேர் மட்டும் சாட்சியமளித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வன்னேரிக்குளம் ஜயனார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சாட்சியமளிப்பதற்காக  ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 56 பேர் வந்தனர். இருப்பினும், 34 பேர் மட்டும்  சாட்சியமளித்தனர்.

மேற்படி இரண்டு நாட்களிலும் சாட்சியமளிப்பதற்கு வந்திருந்தவர்களில்; திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு பிறிதொரு தினத்தில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும்  அவர் கூறினார்.

தொடர்ந்து, இன்று திங்கட்கிழமையும்  (20) நாளை செவ்வாய்க்கிழமையும் (21) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சாட்சியமளிப்பு  முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று திங்கட்கிழமை  பொன்னகர், பாரதிபுரம், மலையாளபுரம் ஆகிய பிதேசத்திலுள்ளவர்கள் சாட்சியமளிக்கின்றனர். நாளை செவ்வாய்க்கிழமை கோணாவில் பிரதேசத்திலுள்ளவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .