2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 800 ஏக்கரில் சிறுபோகம்: ரூபவதி

Kogilavani   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் தற்போதுள்ள நீரினைக் கொண்டு குளத்தின் கீழுள்ள 800 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையும், 150 ஏக்கரில் உபஉணவுப் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயளாலர்     ரூபவதி     கேதீஸ்வரன் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.

இத்தீர்மானம் 'இவ்வருடம் சிறுபோக நெற்செய்கையினை எவ்வாறு மேற்கொள்ளுதல்' என்ற தொனிப்பொருளின்; கீழ் வியாழக்கிழமை (27) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இரணைமடு விவசாயிகளுடனான கூட்டத்திலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

வறட்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 15 அடிக்கும் குறைவாகக் காணப்படுகின்றமையினால் இதனைக் கொண்டு சிறுபோக நெற்செய்கையினை செய்யமுடியாது.

ஆனாலும் குளத்தில் இருக்கும் நீரின் அளவினைக் கொண்டு நீர் முகாமைத்துவத்தின் மூலம் சிக்கனமாக நீரினைப் பயன்படுத்தி 800 ஏக்கர் அளவில் நெற்செய்கை செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருட இறுதியில் மேற்கொள்ளவுள்ள பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான விதை நெல்லினைப் பெறவேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது என்பதினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சிறும்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளவது தொடர்பான விளக்கங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .