Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிரிகள், துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டதே 'தமிழ் மக்கள் பேரவை' என்று நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதிஅவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கது என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இக்குழு இன்று(30) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
மக்களின் பிரச்சினைகளை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுத்து, ஒருமித்த குரலில் மக்கள் பிரதிநிதிகளின் ஊடாக அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதே தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமாகும். இந்த உயரிய நோக்கத்தை சிறுமைப்படுத்தும் விதத்தில் நீங்கள் கூறியிருக்கும் கருத்து உங்கள் மீது தமிழ் மக்கள், குறிப்பாக வன்னி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை உதயத்துக்கான ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உங்களை அழைத்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்த நீங்கள் வருவதாக உறுதி அளித்து ஏற்பாட்டாளர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து பின்னர் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடி ஒளிந்தீர்கள். இதன் காரணமாகவே உங்களை ஏற்பாட்டாளர்கள் அழைக்காமல் விட்டிருக்கலாம். அவர்கள் அழைத்திருந்தாலும் நீங்கள் இதயசுத்தியுடன் கலந்துகொண்டிருக்க மாட்டீர்கள்.
சர்வதேச விசாரணையே வேண்டும் என்று வலியுறுத்தி கட்சியின் தலைவராக இலங்கையில் கையொப்பம் வைத்துவிட்டு, பின்னர் நாற்பது அமைப்புகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு ஐ.நா. மனிதவுரிமை பேரவையிடம் கையளித்த பின்னர், எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றீர்கள்.
இத்தகைய வரலாற்றைக் கொண்ட நீங்கள், தமிழ் மக்கள் பேரவையைப் பார்த்து வசைபாடியிருப்பது உங்களது அரசியல் அறிவீனத்தையே காட்டுகிறது. உங்களது விமர்சனத்துக்கு நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
22 minute ago
28 minute ago