2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அதிக வெளிச்சம் காரணமாக மீன்பிடி பாதிப்பு

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடலில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி தொழிலில் ஈடுபடுவதன் காரணமாக, தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இதன் காரணமாக உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கான மீன்பிடி குறைவடைந்துள்ளது. நாயாற்றுப் பகுதியில் இருந்து திருகோணமலை பக்கமாக, கரையில் இருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் வெளிச்சம் பாய்ச்சி தொழில் நடைபெறுகின்றது” என, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கரைதுறைபற்று பிரதேச செயலகம், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“முல்லைத்தீவில் கடலில் நடைபெறுகின்ற சட்ட விரோத மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு கடந்த 5 வருடங்களுக்கு அதிகமாக, கடற்றொழிலாளர்களினால் குரல் எழுப்பி வருகின்ற போதிலும் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி தொடகின்றது” என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .