Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாகச் செயற்படும் அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில், போராட்ட வடிவத்தை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தொடர்பில், ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களினதும் தொடர் போராட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதன்படி, வடக்கு - கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
பேரவைக் கூட்டம் தொடர்பில், தொடர்ந்து கருத்துதத் தெரிவித்த கஜேந்திரகுமார், “பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 30, 40 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அரசாங்கம் பாராமுகமாகவே செயற்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்தைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில், போராட்ட வடிவங்களை மாற்றி, மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.
“அதேவேளை, கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமானது, பேச்சு சுதந்திரம் உள்ள நாடு என, சர்வதேசத்தின் முன்னால் கூறிக்கொண்டிருக்கும் நல்லாட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளத”என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025