2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘அரசியல்வாதிகள் ஏமாற்றிவிட்டனர்’

Princiya Dixci   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

அரசியல்வாதிகள், தங்களை ஏமாற்றி விட்டனரென கிளிநொச்சி, பூநகரி, இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

"இரணைதீவிலிருந்து 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முழங்காவில் இரணைமாதா நகரில் 336 குடும்பங்கள் தங்கியுள்ளோம்.

"2010ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது மீள்குடியேற்றத்துக்கும் தங்கி நின்று கடற்றொழில் புரியவும் அனுமதிக்குமாறு, கோரிக்கை விடுத்திருந்தோம்.

"மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் இரணைதீவுக்குக் கூட்டாகச் செல்வோம் என எமக்கு வாக்குறுதி அளித்தார்கள். சில அரசியல்வாதிகள் தனியாக இரணைதீவுக்குச் சென்று திரும்பி வந்து எம்மைக் குடியேற்றுவதாக உறுதியளித்தார்கள். எவையும் நடைபெறவில்லை. ஒன்று மட்டும் எமக்கு விளங்குகின்றது, அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி விட்டனர் என்பது மட்டுமே உண்மை.

"பூநகரியில் எமது மீள்குடியேற்றம் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தி மனுக் கையளித்திருக்கின்றோம். அடுத்த கட்டமாக மிகப் பெரியளவிலான போராட்டத்தை மேற்கொள்வதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

"அரசியல்வாதிகள் வழமையாக ஏமாற்றுவதுபோல ஏமாற்றி இருக்கின்றனர். எமது மீள் குடியேற்றத்துக்கும் தங்கி நின்று தொழில் புரிவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் எடுக்கவில்லை" எனவும் இரணைதீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .