Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 மார்ச் 26 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகம் 3 ஆயிரம் ஏக்கரிலேயே மேற்கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலக விவரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் சிறுபோக நெற்செய்கை தொடர்பாக ஆராயப்பட்டது.
அக்கராயன், குடமுருட்டி, புதுமுறிப்பு, வன்னேரிக்குளம் ஆகியவற்றிலேயே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளக் கூடியதாக குளங்களின் நீர் மட்டம் காணப்படுகின்றது. இரணைமடுக்குளத்தில் தற்போது நீர் மட்டம் பத்தடியாகக் காணப்படுகின்றது. இனிவரும் நாட்களில் மழை பெய்து குறைந்தது பதினெட்டு அடி நீர் மட்டம் உயருமானால் சிறுபோகத்துக்கான வாய்ப்பு இரணைமடுவில் காணப்படுகின்றது.
மழை பெய்யுமானால் கல்மடுவிலும் சிறிதளவிலான சிறுபோகத்துக்கான வாய்ப்பு உள்ளது. நீர் மட்டம் காணப்படுகின்ற குளங்களின் கீழான சிறுபோகம் கூட இவ்வாண்டின் காலபோகத்திற்கான விதை நெல்லினை மாவட்ட மட்டத்தில் தீர்மானிப்பதாக இருக்கும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விதை நெல்லுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, சிறுபோக நெற்செய்கை, விதை நெல்லிற்கானதாகவே அமையும். கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக நெற்செய்கை அளவின் அதிகரிப்பு இனிவரும் நாட்களில் பெய்கின்ற மழையினைப் பொறுத்தே அமையும்” எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago