Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், சுப்ரமணியம் பாஸ்கரன்
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்புக் காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, ஒன்பது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், முடிவு இல்லையேல் நிறுத்தப்பட மாட்டாதென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
கடந்த 31ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல், இரவு பகலாக பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள விமானப்படை முகாமுக்கு முன்னால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையும், போராட்டத்தில் ஈடபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் பாடசாலைச் செல்லாமை காரணமாக, சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர், காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரையில், மாதிரி கிராமத்திலுள்ள வீடுகளில் தங்கியிருந்து பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறும் கோரினர்.
இதற்குப் பதிலளித்த அம்மக்கள், 84 குடும்பங்களுக்கும் சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவித்து, அந்தக் காணிகளில் மீள்குடியேறும் வரையில், இந்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, பதிலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களது கல்வியை இடைநிறுத்த வேண்டாமென, அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோரினர்.
இன்றைய தினப் போராட்டத்தில், வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago