Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம், 12ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது.
கடந்த 31ஆம் திகதி, மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமுக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து இரவு, பகலாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போரட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.
இந் நிலையில், மக்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கம் அழைப்பு விடுத்தபோதும் அந்த அழைப்பை, மக்கள் நிராகரித்திருந்தனர்.
பிலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தமது ஆதரவை வழங்கியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இந்நிலை தொடருமானால் தாம் படிப்படியாக முல்லைத்தீவு மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்களையும் இணைத்து போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் படிப்படியாக மாகாண, நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டங்களையும் செய்ய எண்ணியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இதனைவிட மதத் தலைவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வருகைதந்து தமது பூரண ஆதரவை வழங்கியதோடு, எவ்வேளையிலும் தமது ஆதரவை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago