2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

3ஆவது நாளாகவும் தொடரும் முல்லைப் போராட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் 682ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னால் புதுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (03) முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னால் இம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள தமது காணிகளை 682 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும்  இதனைவிடுவித்து தருமாறு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொடச்சியாக கோரிக்;கை விடுத்து வந்தபோதும் இதுவரை குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.

வீடுகள் கடைகள் உள்ளடங்கலாக சுமார் 52 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் இவ்;வாறு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியை விடுவிக்குமாறு கடந்த ஆண்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதும் பலரது வாக்குறுதிகளை நம்பியிருந்தனர். ஆனால், இன்றுவரை குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இக்காணி உரிமையாளர்கள் இக்காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து படையினர் வெளியேறுமாறு கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் குறித்த போராட்டத்தை வெள்ளிக்கிழமை (03) காலை முதல் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .