2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'இரணைதீவை விடுவிக்கவும்'

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகளவான கடல் வளத்தைக்கொண்ட கிளிநொச்;சி, இரணைதீவை விடுவித்து, தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்;வதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என, இரணைதீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், அதிகளவான வளத்தையும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் முன்னெடுப்பதற்கான தொழில்வளம் கொண்ட தமது பூர்வீகக் கிராமமான இரணைதீவை, தொடர்ந்தும் கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் இதனை விடுவித்துத் தரவேண்டும் எனவும், இரணைதீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீலுள்ள மிகவும் பழமைவாய்ந்த, தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இரணைதீவு கிராமம், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக கடற்படையினர் வசமுள்ளதுடன், இதுவரை குறித்த பகுதி மீள்குடியமர்வுக்கோ அல்லது அங்கு சென்று தொழில் செய்வதற்கான அனுமதிகளோ, எவையும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் இதனை விடுவித்து, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்ற நம்பிக்கை இருந்தபோதும், இதுவரை இந்த அரசு எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் தாங்கள், தற்காலிகமாக தங்கியுள்ள இரணைமாதா நகரில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம்,இரணைதீவை விடுவித்து, தம்மை அங்கு மீள்குடியேற அனுமதிக்குமாறு கோரி பூநகரி பிரதேச செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .