2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இரணைமடுக் குளத்தின் கீழ் 800 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  800 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  ​நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குளத்தின் நீரின்  அளவை கருத்திற் கொண்டு  கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார்   900 ஏக்கரில் சிறுபோக  நெற்செய்கை  செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கோவிந்தன்கடைச்  சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ  அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும்  பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான  எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற  கலந்துரையாடலின் போது, இந்த  தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் முடிவுகள், எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .