2025 ஜூலை 12, சனிக்கிழமை

'இழப்பீடு வழங்க வேண்டும்'

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் அழிவடைந்து வருகின்ற நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் வரட்சியால் ஏற்பட்டுள்ள பயிர் அழிவுகளுக்கு மேற்படி தொகையினை இழப்பீடாகப் பெற்றுக் கொள்ளும்போது தான் எதிர்காலத்தில் விவசாய முயற்சிகளில் ஈடுபட முடியும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வரட்சி தொடர்பான சிறப்புக் கூட்டத்திலும் விவசாயப் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .