2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'ஒட்டுசுட்டானில் 45 குளங்கள் புனரமைக்கப்படவில்லை'

George   / 2017 மார்ச் 02 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சேதமடைந்த 45 குளங்கள் புனரமைக்கப்படாமல் காணப்படுவதாக  இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 27 கிராம அலுவலர் பிரிவுகளையும் 114 கிராமங்களையும் கொண்டு காணப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், 45 வரையான சிறிய விவசாயக்குளங்கள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் குளங்களை புனரமைத்து தருமாறும் இந்தக்குளங்களை புனரமைத்துக் கொள்வதன் மூலம், இதன் கீழ் உள்ள பயிர் செய்கை நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச மக்களுடன் சந்திப்பை  மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரிடமும் இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .