Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவில் மக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், ஐனாதிபதியின் கவனதுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், அக்காணிகளை விடுவிக்குமாறு, உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது,
“கேப்பாப்புலவு காணிகள், மக்களுடையது தான் என உறுதிகள் இருந்தால், அவர்கள் அக்காணிகளுக்குச் செல்லலாம் என்று அரசு கூறுகின்றது. அதற்கமைய, அம்மக்களிடம் அந்தக் காணிகளுக்கான உறுதிகளும் இருந்தன. அவ்வாறு மக்களிடம் காணி உறுதிகள் இருப்பதாக மாவட்டச் செயலராலும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, அக்காணிகளில் ஒரு பகுதி, வனஇலாகாவுக்குச் சொந்தமானதெனக் கூறி வருவதாகக் கேள்வியுற்றேன். அந்தப் பகுதிகளுக்கு மக்கள் நீண்டகாலமாகச் செல்லவில்லை. இதனால் அந்தக் காணிகள், பற்றைகள் நிறைந்த காடுகளாகவே இருக்கின்றன. ஆகையால் தான், வனஇலாகாவினர், அவை தமக்குச் சொந்தமானவை என்று கூறுகின்றனர்.
இதன்போது, அவை மக்களுடைய காணிகள் என்றால், மக்களுக்கு வழங்குங்கள் என நான் கூறினேன். அப்போது, விமானத் தளத்துக்கு அவ்வழியாகப் பாதை அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கு, பாதையை மாற்றுங்கள் என்று கேட்டபோது, கட்டிடங்கள் அமைந்திருப்பதாக, அவர்கள் கூறினர். இவ்வாறானதொரு நிலையிலேயே, இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது” என, முதலமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago