2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரின் 'விவரங்களை தாருங்கள்'

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

“வவுனியா மாவட்டத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு மற்றும்  ஏனைய முறைகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக, அவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாங்கம் மற்றும்  மனித உரிமைகள்  அமைப்புகளுக்கு  கையளிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பாக பதிவுகளை மேற்கொள்ளுங்கள்” என, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி திருமதி காசிப்பிளை ஜெயவதனா  அறிவித்துள்ளார்,

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து, தீர்வு கிடைக்கும் வரை  சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து 61ஆவது நாளாக  தொடர்ந்து  முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  வவுனியா நகரப் பகுதியில் போராட்டம்  நடைபெறும்  இடத்தில் பதிவுகள் இம்பெற்று வருகின்றன.
திரட்டப்பட்ட 115 பேரின் விவரங்களை வடக்கு மாகாண  சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஊடாக, அரசாங்கத்துக்கு  கையளிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை  கையளித்துள்ளோம்.

இரண்டாவது விவரப் பட்டியல் விரைவில் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே,  இது வரை பதிவுகளை மேற்கொள்ளாத உறவினர்கள், 30ஆம் திகதிக்கு முன்னதாக  பதிவுகளை மேற்கொள்ளுங்கள்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .