2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் நாம் முடிவெடுக்க முடியாது'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக போராட்டம் நடாத்தும் மக்களுக்கான தீர்வு குறித்து விமானப்படையினர் தீர்மானிக்க முடியாது” என, விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரவித்தார்.

விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானது. உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருகின்றது.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதிப் பெற்று வந்தால் குறித்த காணி திருப்பி வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம்.

காணி தொடர்பில் பிரச்சினைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாகத் தீர்வுக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில், விமானப்படையினரால் தீர்மானிக்க முடியாது”  என ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .