2025 ஜூலை 12, சனிக்கிழமை

'கிராமங்களின் பெயர்களை அரசியலுக்காக பயன்படுத்த ​​வேண்டாம்'

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களுக்கு அரசியல்வாதிகள் வருவதில்லை” என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“450 வரையான குடும்பங்கள் மீளக் குடியமர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசியல் கூட்டங்களிலே முள்ளிவாய்க்கால், மாத்தளன், அம்பலவன்பொக்கணை என பெயர்கள் சொல்லி, தங்களுடைய அரசியல் வாழ்வை நகர்த்தும் அரசியல்வாதிகள், தமது கிராமத்துக்கு வந்து பார்ப்பதில்லை” என அந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான பிரதான வீதி புனரமைக்கப்படவில்லை எனவும், கிராமங்களின் உள்வீதிகள் புனரமைக்கப்படமை காரணமாக, அம்பலவன்பொக்கணை மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்கள், வீதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால், காலணிகளை கழற்றி, கைகளில் ஏந்திச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது” என்றனர்.

இது தொடர்பில், அரசியல்வாதிகள் எந்தவித அக்கறையும் செலுத்தாத அரசியல்வாதிகள், தமது கிராமத்தின் பெயர்களை, சுய இலாப அரசியலுக்கு பயன்படுத்துவதை  நிறுத்திக்கொள்ள வேண்டும் என  மக்கள் சாடுகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .