Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
“எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அப்படியொரு முடிவை, வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை” என், அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், தொவித்துள்ளார்.
அது குறித்து அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம்.
அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம். இருப்பினும், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண கதவடைப்பு நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், வவுனியா வர்த்தச சங்கம் அப்படியான எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது அவர்களுடன் தொடர்புபட்டவர்களோ இதுவரை எம்முடன் போராட்டம் குறித்தோ அல்லது பூரண கதவடைப்பு குறித்தோ எந்த கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை.
அதேபோல், எமது வர்த்தச சங்கமும் இது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, வவுனியாவில் பூரண கதவடைப்பு என தற்போது வெளியாகியுள்ள செய்தி தவறானது” என அவர் மேலும் கூறினார்.
21 minute ago
30 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
40 minute ago
2 hours ago