Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 06 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை நிலமாக நூறு ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றபோதும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் பராமரிக்கக் கூடிய வகையில் மேய்ச்சல் தரவைகள் இன்றி காணப்படுகின்றது. ஏற்கெனவே, மேய்ச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இதனால், வருடாந்தம் பயிர் செய்கை காலங்களில் திறந்த வளர்ப்பு முறையினை மேற்கொள்ளும் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்ச்சல் தவைகள் இன்றி வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கால்நடைகளை பளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தனியார் காணிகளுக்கு கொண்டு செல்லும் போது கால்நடைகள் களவாடப்படுகின்றமை, குறித்த பகுதிகளில் தோட்டச்செய்கை போன்ற பயிரழிவுகள் ஏற்படுத்தப்படுகின்றமை போன்றவற்றால் கால்நடை பண்ணையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடையாளங்காணப்பட்டு அவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கல்மடு நகர் பகுதியில் நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, “மேய்ச்சல் தரவைகளுக்கான இடங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான அனுமதிகளை கோரும் பொருட்டு அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்” என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago