Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதோடு, தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் வழங்குவதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக வைத்தியர் பயிலுநர் விடுதி திறக்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(2) மாலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஜீட் ரதனி தலைமையில் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடரந்து கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளதாக அறிகின்றேன்.
அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதுடன், மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற விசேட சத்திரச்சிகிச்சை நிபுணர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்.
அத்துடன், புதிதாக கொள்வனவு செய்யப்படவுள்ள அம்பியுலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினை மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் வழங்கவுள்ளேன்” என்றார்.
இதன் போது, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 900 மில்லியன் ரூபாய் நிதி, மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதையும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்படவிருந்த விசேட சத்திரச் சிகிச்சை கூடம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தடைப்பட்டுள்ளமை குறித்தும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சுகாதார அமைச்சர் ராஜிதவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்த ராஜித, மன்னார் பொது வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள விசேட சத்திர சிகிச்சை கூடத்தை, நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய நிதியில், எஞ்சியள்ளதை பயன்படுத்தி, அமைக்க அனுமதி வழங்குவதுடன், அதற்கு தேவைப்படும் மிகுதி நிதியை சுகாதார அமைச்சினூடாக விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர்கள், விசேட சத்திர சிகிச்சை நிபுணர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிரதி சுகாதார சேவைகள் பயிப்பாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025