Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 06 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை இன்று ஆறாவது நாளாகவும் பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர்.
128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே பொதுமக்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தை தொடர்ந்து, பொதுமக்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசதங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
கடந்த முதலாம் திகதி, புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததை அடுத்து கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், கேப்பாப்புலவு மக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“எத்தகைய அச்சுறுத்தலை இராணுவத்தினர் விடுத்தாலும் தாம் போராட்டத்தை நிறுத்திவிடப் போவதில்லை என்றும் போராட்ட இடத்திலே மடிந்தாலும் சொந்தநிலம் திரும்பாது தமது மண்மீட்பு போராட்டம் தொடரும்.” என்றும், கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றையதினம் போராட்ட இடத்துக்கு வருகைதந்த வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், மக்களோடு கலந்துரையாடி அவர்களது போராட்டத்துக்கான தங்களுடைய ஆதரவினையும் வழங்கினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago