Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 13 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய வகையில், கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்கவும், சிறுகைத்தொழில்களை விருத்தி செய்யவும் இந்த அரசாங்கம் விரைவாக முன்வரவேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்து, ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் தொடரந்து கூறுகையில், “தன்மானத்தோடும் கௌரவத்தோடும் வாழ்ந்த எங்களது சமுகம், இன்று அவர்களின் நிலங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் பறிக்கப்பட்டு யார் எதைக்கொண்டு வந்து தருவார்கள் என்ற மனநிலையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் நிலைபேறான வருமானமுடையவர்களாக மாறவேண்டும். அதற்கேற்ப தொழிற்றுறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago