Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறையிலே வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்வதற்காகக் கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் இணைந்து உழைக்க வேண்டுமென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில், அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (04) நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது மேலும் கூறியதாவது,
"இந்த மாவட்டத்தில் உங்களோடு வாழ்ந்து, உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப்போல் அகதியாக வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணகரட்னம் ஐயாவின் புதல்வரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார். எனவே, சிறையில் வாடுபவர்களின் வடுதலைக்காக ஒன்றுபட வேண்டும்.
இன, மத மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.
இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது முன்னோர்கள் இணைந்து போராடிப்பெற்றுக் கொண்ட சுதந்திரம் இது. எத்தனையோ தலைவர்களின் வியர்வை சிந்தி பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை எந்தவிதமான பேதமுமின்றி, முல்லைத்தீவு மண்ணில் இன்று கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நிம்மதி இழந்து பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்கள் நிம்மதியற்ற வாழ்வுக்கு மத்தியிலே வாழ்ந்து வந்தோம். முல்லைத்தீவு மக்களும் இதனால் பட்ட துன்பங்கள் கொஞ்ஞ நஞ்சமல்ல.
யுத்தத்தில் ஆர்வம் காட்டிய 12,000 புலிகள் சமாதானத்தை நோக்கி வந்து சமூக வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இப்போது சுமுகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இவர்களின் வாழ்க்கைக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். மனிதாபிமான ரீதியில் இவர்களின் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இனவாத சிந்தனையுள்ளவர்களின் செயற்பாடுகளினால் நமக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து பாரிய அழிவை நாங்கள் சந்தித்து இருக்கின்றோம்.
அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து சமுதாயத்தை முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
இந்த நல்லாட்சியில் பல கட்சிகளைச் சேர்ந்த நல்ல பண்புள்ள அரசியல் தலைவர்கள் பங்காளிகளாக இருக்கின்றனர். எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்கு இதைவிட ஒரு நல்ல தருணம் கிடைக்காது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago