2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை'

Kogilavani   / 2017 மார்ச் 21 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செய்கைகளை கட்டுப்படுத்த, உரிய தரப்பினர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் இதனால் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதாக, இப்பகுதி மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இப்பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் பெருமளவான காட்டுமரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. மூன்றுமுறிப்பு, சிறாட்டிகுளம், பாலைபாணி, ஆகிய பகுதிகளிலும் துணுக்காய் தென்னியன்குளம், தேறாங்கண்டல், ஐயன்கன்குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் காடுகளில் உள்ள மிகவும் பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அத்துடன் மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பகுதிகளிலும் பாலியாறுப் பகுதியிலும், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் மற்றும் கிரவல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், வாழ்வாதாரத் தேவைகளுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் கடத்தப்படுதல் போன்ற செயற்பாடுகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறு இப்பகுதிகளில் பெருமளவான வளங்கள் அழிக்கப்படுவதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்றும், இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .