2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘தந்தையை பார்க்க வேண்டும்’

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“பிறந்தது முதல் எனது தந்தையை காணவில்லை. அவரை நான் பார்க்க வேண்டும்” என, 9 வயது சிறுமி கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும், “இராணுவம் தான் என் தந்தையை பிடித்து சென்றது. ஜனாதிபதி மாமா எனது தந்தையை விடுதலை செய்யுங்கள். எனது தந்தையை நான் கண்டதில்லை” எனவும் அச்சிறுமி தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் இன்று (05) 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதன்போதே அச்சிறுமி இவ்வாறு தெரிவித்தது.

மேலும், “நான் 6 மாத கற்பிணியாக இருந்த போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவரை மீட்டு தாருங்கள்” என, அச்சிறுமியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கிளிநொச்சி  கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .