2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'7 நாட்களுக்குள் தீர்வு வேண்டும்'

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் 26ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சொந்த நிலத்துக்குச் செல்வதற்காக வீதிகளில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 26 நாட்களாக போராட்டம் தொடரும் நிலையில், இதுவரை எந்தவொருத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம்  தமது போராட்ட இடத்துக்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு தமக்கு ஏழு நாட்களுக்குள் முடிவொன்றை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அனைவரும் கலந்துரையாடி, தமது பிரச்சினைகளை உரிய இடத்துக்கு கொண்டுசென்று தமக்கான நல்ல தீர்வை பெற்றுத் தருமாறும்  உரிய தீர்வு பெற்றுத்தராத பட்சத்தில், போராட்ட வடிவங்களை மாற்றி போராடுவோம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவப்பிரகாசம் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர்  கமலேஸ்வரன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், க. சிவநேசன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .