2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

' நுளம்பு ஓழிப்பு தேசிய வாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும்'

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

எதிர்வரும் வரும் 29ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 4ஆம் திகதிவரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் பிரகடகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, கிளிநொச்சி  பொதுச் சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில்,பொதுச் சுகாதார துறையினர் வீடுகளுக்குச் சென்று டெங்கு நோய்காவும் நுளம்புகள் உள்ளனவா, அந்த நுளம்புகள் வளரக்கூடிய வாழ்விடங்கள் உள்ளனவா எனப் பார்வையிட்டு, மக்களுக்கு  ஆலோசனை வழங்கவுள்ளனர்

அத்துடன், மாவட்டத்தில் பராமரிப்பற்ற நிலையில் கழிவுப்பொருட்களைக் கொட்டும் பகுதிகளாகப் பயன்படும் காணிகளை இனங்கண்டு, அந்தந்தப் பகுதிகளுக்குரிய பிரதேசசபைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
காணி உரிமையாளர்களோ அல்லது பராமரிப்பவர்களோ விரைந்து அவற்றைச் சுத்தப்படுத்துவதன் மூலம் அசௌகரியங்களைத் தவிர்த்துகொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .