2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘பெண்களே போரால் பாதிக்கப்பட்டுள்ளனர்’

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுப்பிரமணியம் பாஸ்கரன்

“போர் நடைபெற்ற நாடுகளில், அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் எழுச்சி நாளையொட்டி, கிளிநொச்சி மாவட்டத்தில், நீள்விழி பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார், தங்களுடைய பிள்ளைகளின் வருகைக்காக காத்திருக்கின்ற ஒரு மிக முக்கியமான காலம். பல்வேறுபட்ட நாடுகளில், இவ்வாறான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிராகவே நடந்திருக்கின்றன.

"இவ்வாறு போர் நடைபெற்ற நாடுகளில், அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக, பெண்களை நோக்கியதாகவே அந்தப்போர்கள் எல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு போர் வடிவங்களில் இருந்து மீண்ட பெண்கள் தான், உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதேபோல் தான் எமது மண்ணிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார், மனைவி, பிள்ளைகள், தமது உறவுகளைக் காட்டுமாறு கோரி, போராட்டங்களை இன்று நடத்தி வருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .