2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவுங்கள்'

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும், வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான மக்கள் மீள் குடியேற்றத்தின் போது, 2890 குடும்பங்களைச் சேர்ந்த 9100 அங்கத்தவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில், பெற்றோர்களை இழந்த நிலையில் 19 சிறுவர்களும், தாய்  அல்லது தந்தையை இழந்த நிலையில் 162 சிறுவர்களுமாக மொத்தம் 181 பேர் பல்வேறு துன்ப,  துயரங்களுக்கு மத்தியில் தங்களது  பாட்டி, பாட்டன் மற்றும்  உறவினர்களுடனும்  வாழ்ந்து வருவதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாந்தைக் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் தாய், தந்தை இருவரையும்  இழந்த நிலையில் 11, சிறுவர்களும், 8 சிறுமிகளும், தந்தையை இழந்த நிலையில் 67 சிறுவர்கள்,  65  சிறுமிகள், தாயை இழந்த  14 சிறுவர்கள், 16 சிறுமிகள்  பல்வேறு  துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு  உதவி செய்ய  விரும்புவோர், மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .