Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 03 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
“பழியைப் போட்டவர்களுக்கு உதவியாக முதலமைச்சர் இந்த குழுவை அமைத்துள்ளார்” என, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்த வைத்தியசாலை கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் போதே இன்று இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய எல்லை புறங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்டுகின்றன. அங்கு வாழுகின்ற சகோதர மொழி பேசுகின்றவர்களை இப்போது எங்களுடைய பிரதேச சபைகளுடன் இணைப்பதற்கானதொரு சதி முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிய மக்களை, வவுனியா வடக்கு பிரதேச சபையின் 4 வட்டாரங்களுடன் இணைத்துள்ளார்கள். அவர்கள் நிர்வாக ரீதியாக வெலியோயா என்ற மணலாறு முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில், அரசியல் தேவைக்காக மாத்திரம் அவர்களை வவுனியா வடக்கு பிரதேச சபைக்குள் இணைத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம்.
100 வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற இடத்தில் அதே எண்ணிக்கையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியமர்த்திவிட்டு, இப்போது நான்கு உறுப்பினர்களை வவுனியா வடக்கு பிரதேச சபைக்குள் உள்வாங்க பார்க்கின்றனர்.
அந்த மக்களுக்கே இவ்வாறான நிர்வாக ரீதியிலான மாறுபட்ட பிரதேசங்களுக்கு சென்று வருவது சிக்கலுக்குரியதாகும். அத்துடன் அம் மக்கள் தங்களை வவுனியா தெற்கு பிரதேச சபையுடன் இணையுங்கள் என்று கடிதம் எழுதி கொடுத்திருக்கின்றார்கள்.
நாங்களும் அதனையே செய்யுங்கள் என்று சொல்லி சொன்னோம். சிங்களம் பேசுகின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அதனையே செய்யுங்கள் என்றும் கூறினார்கள்.
இவ்வாறான நிலையில், 4 வட்டாரங்களுடன் மேலும் இரண்டு வட்டாரங்களை வவுனியா வடக்குடன் சேர்த்து எல்லை நிர்ணயம் செய்திருப்பதாகவும் நான் அறிந்துள்ளேன். எனவே, இதற்கு உரிய நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.
இந் நிலையில், மாகாணசபையை முடக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுபவர்கள் மாகாணசபை என்ன செய்தது என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் மாகாணசபையின் உறுப்பினராக இருப்பதற்கு வெட்கமாக இருக்கின்றது என்று கூட பேசியிருக்கின்றார்கள். அப்படியானவர்கள் மாகாணசபை உறுப்பினர்களாக இருப்பதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.
இப்படியானால், நீங்கள் வாக்குப்போட்ட மக்களுக்கு செய்தது என்ன? அப்படி செய்யாவிட்டால் மாகாணசபை செய்ததையாவது சொல்லத்தானே வேண்டும். அப்படி இல்லாமல் எங்கள் தமிழ் உறுப்பினர்களே மாகாணசபை என்ன செய்தது என கேட்பது கவலைக்குரியது.
கடந்த வாரம் விசேட விசாரணைக்குழுவை அமைத்து அமைச்சர்களை விசரிப்பதற்கு முதலமைச்சர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாகாண அமைச்சர்கள் மீது அபாண்டமான பழியைப்போட்டவர்களுக்கு உதவியாக முதலமைச்சர் இந்த குழுவை அமைத்துள்ளார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
குற்றச்சாட்டு வரும் பொது அதற்கு ஆரம்ப கட்ட விசாரணை என்பது உண்டு . அந்த ஆரம்ப கட்ட விசாரணைகள் கூட முதலமைச்சர் மட்டத்தில் நடைபெறாமல் அந்த விசாரணைகுழு அமைத்த போதுதான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பது எனக்கு தெரியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago