2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பஸ் மோதி 15 மாடுகள் பலி

George   / 2017 ஜனவரி 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். என். நிபோஜன்

யாழ்ப்பாணத்தில் இருந்து மொறட்டுவ நோக்கி பயணித்த தனியார் பஸ்,  வீதியை கடந்த மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து மாங்குளத்தை - கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த பயணிகள், மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிலர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் 10 மாடுகளுக்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி, அதிவேகமாக சென்றதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பலியான மற்றும் காயமடைந்த மாடுகளின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .