2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'மூடப்பட்ட கிளைகளை திறக்கவும்'

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு, தகுதிற்ற நிர்வாகத்தினரின் செயற்பாடே காரணமென மக்கள் சாடியுள்ளனர்.

வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு உட்பட்ட 35 கிளைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 கிளைகள் மாத்திரமே இயங்கு நிலையில் காணப்படுகின்றது.

கிராமங்களில் காணப்பட்ட பல கிளைகள் மூடப்பட்டமையினால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்டுள்ளதுடன், வேலைவாய்ப்புகளும் இல்லாது ​போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 1 ஆம் திகதி, வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெறவுள்ளமையினால், மூடப்பட்ட கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .