2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'முதலமைச்சருக்கு எதிராக வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது'

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கும்படி சிலர் வெளியிட்டு வரும் கருத்துகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வட மாகாண முதலமைச்சர்  சி.வி.னேஸ்வரன், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர அவர் இலங்;கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர் இல்லை.

முதலமைச்சர் பதிவியில் இருந்து அவரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை தமிழ்;த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மறுக்கின்றேன்.

துமிழ்த்; தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு தமிழரசுக் கட்சிக்கு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட மாகாணசபை தேர்தல் இடம்பெற்ற போது; தமிழ்தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அவர் தேர்தலில்; போட்டியிட்டார்.

ஆனால், தமிழரசுக்கட்சி என்ற பெயரை பதித்து அவர்  தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரை ஒரு கட்சிக்குள் கட்டுப்படுத்தி அவருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும்.

வடக்கு முதலமைச்சர் தொடர்பான விடயங்களை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்குள் பேசி தீர்ப்பதற்கு வழிவகைகளை தேடாது பகிரங்கமாக ஊடகங்களில்; அறிக்கை விடுத்து தம்மை பெரியவர்களாக காட்டுவதை நிறுத்தவேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த்; தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .