Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மாந்தைப் பிரதேசத்தில் பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பெற்று, நன்னீர் மீன் வளர்ப்பையும் கடற்றொழில் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு தொழில்வாய்ப்பை பெருக்கவுள்ளோம்” என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
"கடந்த வாரம் மன்னாரிலே என்னை சந்தித்த மீனவர்கள், தாங்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தெரிவித்தனர்.
மீன்பிடி முறைகளைக் கையாள்வதில் 18 வகையான தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் நீண்ட காலமாக தொழிலில் ஈடுபடும் தங்களுக்கு இவ்வாறான அழுத்தங்கள் இருப்பதால் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக, என்னிடம் கூறினார்கள். அதனை நான் அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன்.
"மீனவர்களும், மனசாட்சியுடனும் மனிதாபிமானத்துடனும் செயற்படவேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நீண்டகாலத் திட்டம் அவசியமாகின்றது.
"அவசர அவசரமான அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகளும் பிழையான முடிவுகளும், எல்லோருக்கும் ஆபத்தையே ஏற்படுத்தும். மீனவ சமுதாயமும் மீனவ அமைச்சும் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒத்துழைப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதே, தார்மீகக் கடமையாகும்” என்றார்.
“மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும்போது, அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்குமுகங்கொடுத்து வருவது தொடர்பில், கடற்றொழில் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சருக்கும் உயர் மட்டத்தினருக்கும் உணர்த்தியுள்ளேன்.
"மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் முரண்படாமல் செயற்படுவதன் மூலமே அபிவிருத்தித் திட்டங்களை இலகுவாக முன்னெடுக்க முடியுமென்ற முன்னுதாரணத்துக்கு, அமைச்சர் அமரவீரவும் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனும் சான்று” என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025