2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'மாவீரர் துயிலும் இல்லங்களை கட்டித்தாருங்கள்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'புத்தர் சிலைகள், தமிழர் மனங்களை வெல்லாது. துயிலுமில்லங்களை கட்டித்தாருங்கள். அதன் பிறகு, நீங்களே கடவுள்' என கவிஞர் பொன் காந்தன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் லண்டன் தேசம் இணைய ஆசிரியரும் புலம்பெயர் ஊடகவியலாளருமான ஜெயபாலன் எழுதிய, 'வட்டுக்கோட்டை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை' என்ற நூல் தொடர்பான ஆய்வும் கலந்துரையாடலும், கல்வி அதிகாரி கணேசலிங்கம் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (14) திருநகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, ஆய்வுரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றய கவிஞர், ' நான் அப்படியல்ல அதனால் நெளிகின்றேன். வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது எனக்கு வயது ஒன்று. புதிய புலிகளை தமிழீழ விடுதலைப் புலிகளாக பிரபாகரன் மாற்றிய போதும், எனக்கு வயது ஒன்று. முள்ளிவாய்க்கால் வரை, நான் இந்த மண்ணைவிட்டு எங்கும் போகவில்லை. ஒரு போரின் குழந்தையாக போரின் மனிதனாக மண்புழுவாக வாழ்ந்திருக்கின்றேன். நான் நினைக்கின்றேன் முள்ளிவாய்க்கால் வரலாற்றை எழுதவேண்டுமானால் முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போர்க்களத்தினில் கலந்து பயணித்தவர்களாலேயே முடியும்' என்றார்.

'அது மரணம் மட்டுமல்ல, இப்போது எனக்கு மரணம் நிகழப்போகின்றது என நாம் பயணித்த பயணம். முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய போது, மாவீரர்களின் துயிலுமில்லங்கள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தோம். அப்பொழுதே மஹிந்த ராஜபக்ஷ, எங்கள் மனங்களில் தோற்றுவிட்டார். புத்தர் சிலைகளை வைப்பதை விட்டு, உடைக்கப்பட்ட எமது துயிலுமில்லங்களை கட்டித்தாருங்கள். நீங்கள் கடவுளாகிவிடுவீர்கள். தானாக நல்லிணக்கம் ஏற்படும். தமிழர் மனங்களை வெல்லுவதற்கு முயலுங்கள்' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .