2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன்

'முஸ்லிம்களை நான் ஒருபோதும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆனால், என்னை முஸ்லிம்களின் விரோதியாகச் சிலர் காட்டுகின்றனர்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், 'என்னையும் முஸ்லிம்களையும் தூரப்படுத்தி அதில் அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். வடமாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் எனக்கும் ஓர் இணைப்புப் பாலமாகச் செயற்படுவதற்காக உங்களுடைய கோரிக்கையை ஏற்று முஸ்லிம் சகோதரர் ஒருவரை இணைப்பாளராக நியமி;ப்பதற்கும் நான்  தயாராகவுள்ளேன்' என்றார்.  

'வடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற முடியும் என்பதுடன், இதற்கு எம்மால் எந்தத் தடையும் ஏற்படுத்தப்பட மாட்டாது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். நாம் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை ஊக்குவிக்கின்றோம்.
வடமாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகள், தேவைகளை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தால், 

அவற்றுக்கான தீர்வைப்  பெற்றுக்கொடுக்கவும் நான் தயாராகவுள்ளேன். தங்களின் நிகழ்வுகளுக்கு முஸ்லிம்கள் என்னை அழைத்தால்,  நிச்சயமாக நான் செல்வதற்குத் தயராகவுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.   
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .