2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘மக்களை நம்பியே போராடுகின்றோம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை. எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்” என, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் பிரதிநிதி ஆனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.

“இந்த தொடர் போராட்டத்துக்கு விரைவில்  நல்ல தீர்வு  கிடைக்காது விட்டால், எங்களது போராட்ட வடிவங்கள் மாறும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்று கலந்துகொண்டனர்.  இதன்போது அவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அத்தோடு, விரைவான தீர்வாக அது கிடைக்க வேண்டும் என்பதோடு, இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்பு கூறல் விடயத்தில் ஐ.நா கால நீடிப்பு வழங்க கூடாது என்பதனையும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றோம்.

எங்களது இந்தப் போராட்டத்துக்கு  நாம் அரசியல்வாதிகளை நம்பியிருக்கவில்லை. அவர்கள் விரும்பினால் எங்களது போராட்டத்தில்  கலந்துகொள்ளலாம்” எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .