2025 ஜூலை 12, சனிக்கிழமை

'மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்றிணைந்து ​போராடுவோம்'

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள், மரக்கடத்தல்களை உடனடியாக தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடருமாக இருந்தால் விவசாயிகள், விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம்” என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனிக்குளம் மற்றும் வவுனிக்குளத்துக்கான நீரைசேர்க்கும் பாலியாற்றின் பகுதிகளில் தினமும் சட்டவிரோதமான முறையில் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் குளத்தினை அண்டிய இயற்கை வளங்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் குளம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்” எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .