2025 ஜூலை 05, சனிக்கிழமை

மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

Niroshini   / 2016 ஜூன் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - புளியங்குளம் பொலிஸாரால் இன்று காலை முதிரை மரக்குற்றிகளை கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து சுமார்  3 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 முதிரை மரக்குற்றிகளும் வாகனமொன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இராமனூரில் இருந்து புளியங்குளம் பகுதியினூடாக கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இக் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .