2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யானையிடமிருந்து தப்புவதற்கு கிணற்றில் பாய்ந்தவர் வைத்தியசாலையில்

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, கள்ளிக்குள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, யானை நுழைந்து 4 வீடுகளை சேதப்படுத்தியதுடன், யானை துரத்தியபோது ஓடிச் சென்று கிணற்றில் பாயந்தவர், காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர்  மக்கள் குடியேற்றப்பட்டதுடன், அடிக்கடி யானையினால் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் பயன்தரும் மரங்களை யானை சேதப்படுத்தியதுடன் அக் கிராமத்தை சேர்ந்த இளைஞனை யானை துரத்தியுள்ளது. யானையிடமிருந்து தப்பிச் செல்வதற்காக, கிணற்றுக்குள் குதித்த அவர், காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .