2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வாருங்கள்'

Gavitha   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் நிலவும் காலநிலை மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'2 நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறு குளங்களில் நீர் நிரம்பியுள்ளன. இந்நிலையில்,  பாரிய குளமான துணுக்காய் குளம் உடைப்பெடுக்கும் நிலை  ஏற்பட்டுள்ளமையினால், நீர்பாசன பொறியிலாளர்கள், அரசாங்க அதிபர் ஆகியோர் பார்வையிட்ட பின்னர், மண் மூடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பணிகள் யாவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

பல மக்கள் பாடசாலை மற்றும் கோவில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களுக்கான மேலதிக அத்தியாவசியப் பொருட்களை  உடனடியாக வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் தன்னார் நிறுவனங்கள் உடன் உதவி செய்யவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .