2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்'

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

"வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்" என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஞாயிற்றுக்கிழமை அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடரந்து கூறுகையில், “வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக சாளம்பைக்குளப் பிரதேசம் இன ஐக்கியத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமிழ், முஸ்லிம் உறவுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இந்தக் கிராமத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் சிறப்பானது.

சாளம்பைக்குளம்ப் பிரதேசத்தில் இருக்கும் வவுனியா வளாக மாணவர்கள், இந்த வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயரத்தித் தரும்படி என்னிடம் கேட்டார்கள். இந்தக் கோரிக்கை நியாயமானதாகும்.

பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டால் அதைச்சூழவுள்ள கிராமங்கள் கல்வி நிலையில் மேம்பாடடைவதும் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இயல்பானதே. அந்த வகையில், நான் பயின்ற மொரட்டுவை பல்கலைக்கழகம் சிறப்பான உதாரணமாகும். காடாகக் கிடந்த அந்தப் பிரதேசம் கட்டடங்களாக காட்சி தருகின்றது.

சாளம்பைக்குளத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால், இதைச்சூழவுள்ள ஆயிஷா வித்தியாலயம் அல்-அக்ஷா வித்தியாலயம், சோப்பாளப்புளியங்குளம் ஆகியவை கல்வியில் மறுமலர்ச்சியடையும்.

மீள்குடியேறிய பின்னரும் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். வெளிநாடுகளிலே கல்விக்காக அதிக பணம் செலவழிக்க  வேண்டியிருக்கின்றது. ஜப்பான் போன்ற நாடுகளில் மாணவர்கள் இடைநடுவில் விலகுவதற்கு, அதிக பணச்செலவே காரணம். ஆனால், நமது நாட்டிலே அனைத்தும் இலவசம். ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு முடியும்வரை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றது” என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .