2025 ஜூலை 23, புதன்கிழமை

03 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு; சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் 03 பிள்ளைகளின் தந்தையான ரங்கநாதன் தவராசா (வயது 34) என்பவர்  இன்று வெள்ளிக்கிழமை சடலமாக   மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இடைக்காடு வீதி வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா செல்வா (வயது 39) என்பவரை  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், செல்வராஜா செல்வா என்பவர் எனது கணவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து நேற்று வியாழக்கிழமை இரவு வீட்டில் இறக்கினார்.
இதன் பின்னர் தானும் செல்வா என்பவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதப்பட்டு அடிபட்டுள்ளதாக தெரிவித்த எனது கணவர், உடம்பெல்லாம் வலிக்குது எனக் கூறிவிட்டு உறக்கத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணியளவில் கணவரை சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டார் என சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி தனது வாக்குமூலத்தில் கூறியதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .